Saturday, October 20, 2012

மனிதரை கொல்லப்ப்போகும் பேஸ்புக் ....

சிகரெட் பழக்கத்தை விட படு மோசமானதாக மாறியிருக்கிறது பேஸ்புக், டிவிட்டரைப் பார்க்கும் பழக்கம் என்று கூறுகிறது ஒரு ஆய்வு.சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்தது.ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.
செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம் தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்து்த் தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.
நண்பர்களே பேஸ்புக் பாவிப்பதை நிறுத்தாவிட்டாலும் குறைப்பதற்கு TRY பண்ணுங்கள்.LOL

2 comments:

  1. உண்மைதான் நான் கூட ஒரு பத்து பதினைந்து தடவ போஸ்புக் பக்கம் போறேன்.........
    பட் யாருமே நம்மல கண்டுக்கிறதில்ல.:(

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    ReplyDelete